ஜூஸ் பிழியும் மிஷினில் தங்க கட்டிகள் கடத்தல்

ஜூஸ் பிழியிம் மிஷினில் வைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து இன்று காலை சிறப்பு விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில், கடலூரை சேர்ந்த அருள் ராஜ் சுப்பிரமணியன் (41)  என்பவர் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர் கொண்டு வந்த சூட்கேசில், ஜூஸ் பிழியும் மிஷினில் சோதனை நடந்தது, அந்த மிஷினை பிரித்து பார்த்ததில், ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அருள் ராஜை கைது செய்தனர்.