ஐபிஎல் 2021: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் ? கழற்றிவிடப்பட்ட வீரர்கள் யார்?

2021-ம் ஆண்டில் நடக்க இருக்கும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலத்துக்கு முன்பாக, 8 அணிகளும் தாங்கள் தக்கவைத்திருக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

14-வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை 21-ம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் நடப்பு ஆண்டு ரூ.85 கோடிக்கு மேல் ஏலத் தொகை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து அணிகளும் தங்களிடம் இருக்கும் விலை உயர்ந்த வீரர்களை விடுவித்து, தொகையை அதிகப்படுத்திக்கொண்டு, ஏலத்தில் புதிய வீரர்களை எடுக்க ஆயத்தமாகி வருகின்றன.

ராயல்சேலஞ்சர் பெங்களூரு அணி:

ராயல் சேலஞ்சர்ஸ் அணியிலிருந்து 10 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குர்கீரத் சிங் மான், மொயின் அலி, பர்தீப் படேல், பவன் நெகி, ஷிவம் துபே, உமேஷ் யாதவ், ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெயின், இசுரு உதானா

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

விராட் கோலி, டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல், யஜூவேந்திர சாஹல், முகமது சிராஜ், கானே ரிச்சார்டஸன், வாஷிங்டன் சுந்தர், பவன் தேஷ்பாண்டே, ஜோஷ்வா பிலிப், ஷான்பாஸ் நதீம், நவ்தீப் ஷைனி, ஆடம் ஸம்ப்பா

மீதமிருக்கும் தொகை: ரூ.35.7 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

எம்.எஸ்.தோனி, நாராயண் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட்,ரவிந்திர ஜடேஜா, ஜோஷ் ஹேசல்வுட், கரன் சர்மா, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இம்ரான் தாஹிர், டூ பிளசிஸ், ஷர்துல் தாக்கூர், மிட்ஷெல் சான்ட்னர், டுவைன் பிராவோ, லுங்கி இங்கிடி, சாம் கரன், சாய் கிஷோர்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஷேன் வாட்ஸன்(ஓய்வு), முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங்

இருப்புத் தொகை: ரூ.22.90 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

சஞ்சு சாம்ஸன், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேஷியா, மகிபால் லோம்ரார், கார்த்திக் தியாகி, ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கத், மயங்க் மார்கண்டே, யாஹஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், டேவிட் மில்லர், மனன் வோரா, ராபின் உத்தப்பா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்புத், ஓஸ்னே தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கரன், அனிருத் ஜோஷி, சசாங் சிங்.

இருப்புத் தொகை: ரூ.34.85 கோடி

டெல்லி கேபிடல்ஸ் அணி :

ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவன், ரிஷப் பந்த், இசாந்த் சர்மா,  அஜின்கயே ரஹானே, ரவிச்சந்திர அஸ்வின், பிரித்வி ஷா, லலித் யாதவ், ஆவேஷ் கான், அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா, காகிசோ ரபாட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், பிரவின் துபே, ஹர்ஸல் படேல், டேனியல் சாம்ஸ், ஆன்ரிச் நார்ஜே.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

மோகித் சர்மா, கீமோ பால், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் லாமிசானே, அலெக்ஸ் காரே, ஜேஸன் ராய்

இருப்பு தொகை: ரூ.12.80 கோடி

சன்ரைசரஸ் ஹைதராபாத்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

கேன் வில்லியம்ஸன், டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே, விராட் சிங், பிரியம் கார்க், அப்துல் சமது, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், டி நடராஜன், அபிஷேக் சர்மா, ஷான்பாஸ் நதீம், மிட்ஷெல் மார்ஷ், விஜய் சங்கர், முகமது நபி, ரசித் கான், ஜானி பேர்ஸ்டோ, விருதிமான் சாஹா, ஸ்ரீவத்ஸ் கோஸாமி, பாசிஸ் தம்பி, ஜேஸன் ஹோல்டர்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

பில்லி ஸ்டேன்லேக், பேபியன் ஆலன், சஞ்சய் யாதவ், சந்தீப், பிரிதிவி ராஜ்

இருப்புத் தொகை: ரூ.10.75 கோடி

கிங்ஸ்லெவன் பஞ்சாப்

கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், சர்பிராஸ் அகமது, மன்தீப் சிங், இஷான் போரல், ரவி பிஸ்னோய், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங், முருகன் அஸ்வின், ஹர்பிரித் பரார், தர்ஷன் நல்காண்டே, கிறிஸ் ஜோர்டன், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், பிரப்சிம்ரன் சிங்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே.கவுதம், முஜிப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம், ஹர்தஸ் வில்ஜியோன், கருண் நாயர், ஜெகதீஸா சுசித், திஜேந்தர் சிங்

இருப்பு தொகை: 53.20 கோடி

மும்பை இந்தியன்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், அமோல்பிரீத் சிங், கிறிஸ் லின், சவுரவ் திவாரி, தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர், டிரன்ட் போல்ட், மோஸின் கான், ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், கெய்ரன் பொலார்ட், குர்னால் பாண்டியா, அன்குல் ராய், இசான் கிஷந், குயின்டன் டி காக், ஆதித்ய தாரே

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

லசித் மலிங்கா, நாதன் கூல்டர் நீல், ஜேம்ஸ் பட்டின்ஸன், ஷெர்பானேரூதர்போர்ட், மிட்ஷெல் மெக்லநெகன், திக்விஜய் தேஷ்முக்,  பிரிஸ் பல்வந்த் ராய்

இருப்பு தொகை: ரூ.15.35 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

ஆன்ட்ரூ ரஸல், தினேஷ் கார்த்திக், டிம் ஷீபெர்ட், கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குஷன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், சுப்மான் கில், சுனில் நரேன், பாட் கம்மின்ஸ், இயான் மோர்கன், வருண் சக்ரவர்த்தி, ராகுல் திரிபாதி

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

நிகில் நாயக், சித்தேஷ் லாட், எம். சித்தார்த், டாம் பான்டன், கிறிஸ் கிரீன், ஹாரி குர்னே

இருப்பு தொகை: ரூ. 10.85 கோடி